வெற்றிக்கும் தோல்விக்கும் இடைவெளி மிகக் குறைவு, உங்களின் நிலையை உணருங்கள்!!

Tuesday, 19 June 2018

போட்டித் தேர்வர்கள்  அனைவருக்கும் வணக்கம்.
அனேகமாக அனைவரும் புத்தகங்களைத்  துரத்தி கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்!
நீங்கள் UPSC, TNPSC, SSC, RRB, Banking போன்ற பல தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள். பொதுவாகவே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது என்பது மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒடுவது போன்றது
Don't QuiT
ஏனென்றால், பாடத்திட்டங்களுக்கு ஏற்றவாறு ஆழ்ந்து படிப்பது, பிறகு அவற்றை திருப்புவது, தெளிவான சரியான குறிப்புகள் எடுப்பது, அந்தந்த தேர்வுகளுக்கு தயாராவது, மாதிரித் தேர்வுகள் என பல படிநிலைகள் இருந்தாலும் அவற்றை சரியாக கையாண்டு அசாத்திய பொறுமையுடன் வெற்றி பெறுவது மாரத்தானை விட சற்று கடினம் தான்!
மேலும், தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் சற்றே (வெகு!?) தாமதமாகத் தான் வெளி வருகின்றன. அவையும் நம் பொறுமையை சீண்டித் தான் பார்க்கின்றன. முக்கியமாக அவை தெரிந்தோ தெரியாமலோ நம்மிடம் ஒரு நல்ல குணத்தை வளர்த்து வருகின்றன என்றால் அது 'அசாத்திய பொறுமைதான்' அன்றி வேறில்லை!
ஒவ்வொரு ஆண்டும் போட்டித் தேர்வுகள் அவைகளின் கடினத்தை கடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு இமாலய போட்டி தான் காரணம். தவறில்லை, நாமும் போட்டியிட்டு வெல்வோம்..
சோர்வை விரட்டி சரியான செயல்திட்டத்தோடு விரைந்து தயாராகுங்கள்.
மகா அலெக்சாண்டர் உலகம் முழுவதும் ஆள வேண்டும் என்ற பேரவா உடன் தன் படைகளோடு பயணித்துக் கொண்டிருந்தார். கொட்டும் மழை, ஒரு கட்டத்தில் அனைத்து படைவீரர்களும் சோர்வுற்று விட்டார்கள்.
மன்னரே, "குடும்பங்களை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. நாம் திரும்பிச் சென்று ஆக வேண்டும். மன உளைச்சல் எங்கள் பயணத்தை தொடர அனுமதிக்கவில்லை, இத்துடன் திரும்பி விடலாம்" என்று முழக்கமிட்டனர். அப்பொழுது இந்தியா மட்டுமே பாக்கி இருந்தது. கடும் மழையில் மாட்டிக்கொண்டு இருந்தவர்களால் மேற்கொண்டு எதுவும் யோசிக்க முடியவில்லை. அப்பொழுது அலெக்சாண்டர்,
"வீரர்களே நாம் வெல்ல நினைத்த உலகம் இந்தியாவோட தான் முடிவடைகிறது. இந்தியாவே உலகின் கிழக்கெல்லை. சுமார் நான்காயிரம் மைல்கள் கடந்து அனைத்தையும் துவம்சம் செய்து கைப்பற்றிய நமக்கு, இது ஒன்றும் பெரிதல்ல, ஆனால் வெற்றியின் விளிம்பில் இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். நமது உயர்ந்த லட்சியத்தை இந்த ஒரு போர் தகர்த்து விடக்கூடாது. அப்படி நேர்ந்தால் உங்கள் உறவினர்கள் உங்களை நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டார்கள்" என்றார்.
அலெக்சாண்டர் ஃபயூசி பேலஸில் முத்தமிட்டு அமர, ஜீலம் நதியை கடக்க தயாரானார்கள் வீரர்கள்!!
ஆம், நம்மில் பலர் பல தோல்விகளை சந்தித்திருப்போம்,  சந்திக்க காத்துக் கொண்டும் இருப்போம்..
ஆனால், நமக்குத் தெரியாது நாம் வெற்றியின் விளிம்பில் தான் இருக்கிறோம் என்று..
அலெக்சாண்டர் சொன்ன வார்த்தைகள் மூளைச் சலவை செய்வது போல இருந்திருக்கலாம்.
ஆனால், உண்மையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடைவெளி மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, முடிவு உங்கள் கையில்.. சரியான செயல்திட்டத்தோடு அசாத்திய பொறுமையோடும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள்.
வெற்றி நிச்சயம்!!

No comments:

Post a Comment

 

Search This Blog

Popular Posts

Tags